Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Rules & Regulations
 
  • பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) ஆசிரியரிடமும் நிர்வாகியிடமும் மிக்க மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
  • செய்முறை பயிற்சிகளை பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) மிகவும் கவனமாக செய்தல் வேண்டும். கவனகுறைவாக செய்து ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
  • பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) தங்களது தேவைகள் மற்றும் குறைகளை பயிற்றுநர்க்கு தெரிவித்தல் வேண்டும். பயிற்றுநர்கள் முதல்வருக்கு தெரிவிப்பார்கள். பயிற்றுநர்கள் அனுமதியின்றி முதல்வரை பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) சந்தித்தல் கூடாது. முதல்வர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில்தான் பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) நிர்வாகிகளை சந்தித்தல் வேண்டும்.
  • தொடர்ந்து 1 வாரம் வரை விடுப்பு எடுப்பவர் மருத்துவ சான்றிதழுடன் வருதல் வேண்டும்.
  • வகுப்பு ஆரம்பிக்க 5 நிமிடம் முன்னதாக பயிலுவோர் அனைவரும் வகுப்புக்கு வருகை தருதல் வேண்டும். வகுப்பு ஆரம்பித்த பிறகு வருபவர்களுக்கு absent போடப்படும். தொடர்ந்து வகுப்புக்கு நேரம் தவறி வருபவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குறைந்தபட்சம் 80% term days உடையவர்களை மட்டும் தான் அரசுத் தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • பயிற்சி நிலையத்தில் உள்ள அசையும் அசையா சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் கூடாது. தவறும் நிலையில் அதற்கான முழுத்தொகையும் சம்மந்தப்பட்ட பயிற்சியாளரிடமோ அல்லது அனைத்து பயிற்சியாளரிடமோ வசூலிக்க நேரிடும்.
  • அரசியல் மத இன மொழி பிரச்சனைகள் சம்பந்தமாக பயிற்சி நிலைய வளாகத்திற்குள் பேசுதல் கூடாது. பயிற்சி நிலைய எல்லைக்குள் எந்தவித தீய பழக்க வழக்கங்களையும் கையாளுதல் கூடாது. மீறினால் நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்ளும்.
  • ஒவ்வொரு பயிற்சியிலும் மிகக் குறைந்த இடங்களே (Limited Seats) உள்ளன. எனவே பயிற்சிக் காலத்தின் போது பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) விலக நேர்ந்தால் முழு பயிற்சிக் காலத்திற்கும் செலுத்த வேண்டிய அனைத்துக் கட்டணங்களையும் செலுத்திய பிறகே Discontinue Certificate, TC மற்றும் மார்க் ஷீட் வழங்கப்படும்.
  • பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெற்ற பயிற்சியாளர் Discontinue செய்தால் எக்காரணம் கொண்டும் செலுத்திய கட்டணம் திருப்பித்தரப்படமாட்டாது. மேலும் ஒவ்வொரு டிரேடிலும் ஒரு அலகிற்கு 20 முதல் 24 மாணவஃமாணவிகள் மட்டுமே சேர்க்கமுடியும் என்ற அரசு வரையரை இருப்பதால்இ பயிற்சிக்கட்டணம் முழுமையும் செலுத்தியப்பிறகே மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும்.
  • பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) ITI வளாகத்தில் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.